Menu

Director’s Message

DSC00131

திரு. வை . சந்திர மோகன் B.TECH., MBA.,

நிறுவனர் & இயக்குனர்

வெற்றி பெற துடிக்கும் மாணவ மாணவியர்களே!

ஒவ்வொரு  வருடமும் அரசு பொது தேர்வு முடிவு வெளியாகும் போது மாநிலத்தின் முதல் மூன்று இடம் யார் பெறப்  போகிறார்கள் என்ற ஆவல் அனைவர்க்கும் இருக்கும் என்பதில் துளி அளவும் சந்தேகம் இல்லை. ஏன் நம்முடைய பெற்றோர்களும், நம்முடைய பிள்ளை எடுக்க மாட்டானா என்ற ஏக்கத்தோடும் ஆசையோடும் இருந்து இருப்பார்கள். ஒரு மாணவன் வெற்றி பெற்று விட்டாள்  அனைத்து பத்திரிக்கைகளும் டிவிகளும் அந்த மாணவனே சுற்றி சுழண்டு கொண்டு இருக்கும். பரிசுகளும் பாராட்டுகளும் குவிந்து கொண்டு இருக்கும்.அவன் மாநிலத்தின் கடை கோடியில் வாழ்ந்து கொண்டு இருந்திருந்தாலும்இன்று மாநிலத்தின் அனைத்து மக்களாளும்  அவன் பெயர் உச்சரிக்க்ப்பட்டு இருக்கும். அவனை  சமுதாயத்தில் யாரும் மதிக்காத நிலையில் இருந்து இருக்கலாம் அனால் இன்று அனைத்து மக்களாளும் மதிக்கக்கூடிய மாணவனாக மாறிவிடுவான். அவனது குடும்பம் ஏழ்மையில் வாடி கொண்டு இருந்து இருக்கலாம் அனால் அவன் பெற்ற வெற்றி அவன் குடும்பத்தின் நிலையை ஒரே நிமிடத்தில் மாற்றி இருக்கும்.

என் அன்பு  மாணவ மாணவியர்களே கொஞ்சம் சிந்தியுங்கள்….ஏன் நாம் இந்த வெற்றியாளனாக இருக்க கூடாது? . இந்த சந்தோசத்தை ஏன் நாம் அனுபவிக்க கூடாது?ஏன் நம்முடைய பெற்றோர்களின்  ஆசையை நிறைவேற்ற கூடாது?..

என் அன்பு  மாணவ மாணவியர்களே 

முதலில் வெற்றி பெற ஆசைபட வேண்டும் அதன் பின் வெற்றி பெற்றாள் நாம் அடையப் போகும் சந்தோசத்தை தினம் எண்ணி எண்ணி அனுபவிக்க வேண்டும். இந்த எண்ணமே நம் மனதில் தோல்வி என்ற எண்ணத்தையே வளர விடாமல் நம்மை வெற்றி பாதைக்கு அழைத்து செல்லும்.

இதை சிந்தித்து செயல்ப்பட்டால் வெற்றி நமதே